யாழ். மானிப்பாய் வீதி, கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wesel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜா சோமஸ்கந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை நாட்கள் 31 கடந்ததை..
நாட்கள் 31 ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK, Whatsapp, Viber ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 23-08-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து பி.ப 14:00 மணியளவில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறேன் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்