
யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கட்டுநாயக்காவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சறோஜா நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-08-2022
என் அருமை அம்மாவே!
தொலைபேசி மூலம் தினம் தினம் கேட்ட
உங்கள் குரல் இப்போது கேட்காது ஓராண்டு
ஆகிவிட்டதே!
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்!
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம் துயர்.....
உங்கள் பாசமிகு அரவணைப்பும் இதமான
பேச்சும் எம் மனதில் என்றும் தடயங்களாக
இருக்கிறது
தொலைபேசியில் பேரப்பிள்ளைகளுடன்
உனரயாடிய அழகிய தருணங்கள் என்றும் உங்களை
நினைவூட்டுகிறது அவர்களுக்கு!
இவ்வுலகில் வாழும் காலம் வரை அப்பாவிற்கு
உறுதுணையாக இருந்த நீங்கள் மேல் உலகிலும்
அவருக்குப் பக்கபவமாக இருக்கத்தான் எம்மையெல்லாம்
விட்டுச்சென்றீர்களோ?
கண்ணை இமை காப்பது போல என்னைக்
காத்த அன்புத் தெய்வங்கான அம்மாவே...!
அப்பாவே...!
காத்தது போதும் என்று என்னை விட்டுச்
சென்றீர்களோ?
உங்களுடன் வாழ்ந்த குடும்ப வட்டத்தில்
இன்று நான் தனிமரமாக நிற்கின்றேன்
அம்மா! அப்பா! நீங்கள் இருவரும் நல்ல நிலையை
அடைய ஆண்டவன் அருள் புரியட்டும்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி
காலத்தின் கோலத்தினால் காரைநகர் விட்டு ஒவொரு திக்காக இடம்பெயர்ந்து விட்டொம். இருந்தும் ஊர் பற்றும் நினைவுகளு மரணம் வரை அழியாது. ஆழ்ந்த அஞ்சலிகள். ஆத்மா சாந்தி அடைக்க. ஓம் சாந்தி