Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 NOV 1961
மறைவு 09 DEC 2021
அமரர் சரோஜினிதேவி ரவீந்திரன்
பழைய மாணவி- மகாஜனா கல்லூரி
வயது 60
அமரர் சரோஜினிதேவி ரவீந்திரன் 1961 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:28/11/2022

கணவன் மனக்குமுறல்

என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை 
இறைவன்  என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!

தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நிழலின் நிஜத்தை தேடி
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!


வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
 எங்கள் இதயத்தில்
 என்றென்றும் வாழும் தாயே
 நாம் வாழும் வரை உங்கள்
நினைவுகள் எம்முடன் வாழும்

அன்பு என்னும் அறிவை
 எமக்கு ஊட்டி வளர்த்த
 அம்மாவே உங்களை
 இழந்தோம் என்பதை எம்
 மனம் ஏற்க மறுக்கிறது

மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித
இயல்புதான் ஏனோ
இதயம் வலிக்கிறது அது
 ஏனென்று புரியவில்லையம்மா!

அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
 காத்திருப்போம் இவ்வுலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 10 Dec, 2021