1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணவதி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
அம்மா நீங்கள் எமை
கண்மணிகளாய் ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்