31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சரவணபவான் சதீஸ்குமார்
(Ams சதீஸ்)
வயது 46
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணபவான் சதீஸ்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்
வாடும்
குடும்பத்தினர்..!!!!
தகவல்:
குடும்பத்தினர்