Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மகிழ்வில் 08 MAR 1942
உணர்வில் 15 JAN 2023
அமரர் சரவணமுத்து தங்கமணி (மணியக்கா)
வயது 80
அமரர் சரவணமுத்து தங்கமணி 1942 - 2023 பூநகரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி சித்தன்குறிச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், பூநகரி, பிரான்ஸ் Créteil ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் பரீஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி சரவணமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த
எம் அம்மாவே! அப்பம்மாவே! அம்மம்மாவே! மாமியே!

பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்? அம்மா
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்

ஆணிவேராய் எம்மை
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
 

எமது குடும்பத் தலைவி சரவணமுத்து தங்கமணி அவர்களின் மறைவினால் நாம் கலங்கி நின்ற வேளையில் அவரது மறைவுச் செய்தி அறிந்த மறுகணமே எமது இல்லம் தேடி வந்து எமக்கு ஆறுதல் தந்த அன்பான உள்ளங்களுக்கும், அச்சு மாற்று இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக கண்ணர் அஞ்சலிகளை செலுத்தியவர்களுக்கும், குறிப்பாக உலகின் பல பாகங்களிலும் இருந்து முகநூல் வாயிலாக ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தவர்களுக்கும், அவர் பற்றிய தமது உயரிய கருத்துக்களையும் தமது நினைவுகளையும் முகநூலில் பகிர்ந்துகொண்ட முகம் தெரியாத அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள் மலர்மாலைகள் சாத்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தமது சிரமத்தைப் பாராது தூர இடங்களிலிருந்து நேரில் வந்து அவரின் புகழுடம்பிற்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தியவர்களுக்கும், அன்னையின் பிரிவுச் செய்தியறிந்த மறு நிமிடம் முதல் அந்தியேட்டி நாள் வரை தேவை அறிந்து மனமுவந்து அவ்வப்போது தேநீர் மற்றும் உணவு தந்து உபசரித்த அயலவர்கள் உறவினர் மற்றும் நண்பர் களுக்கும், அஞ்சலியுரை ஆற்றியவர் களுக்கும் மற்றும் எமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்துதவிய பெயர் குறிப்பிடாத உறவுகளுக்கும், இறுதிச் சடங்குகளின் நேரலை நிகழ்வை சிறந்த முறையில் ஒழுங்கமைத்தவர் களுக்கும், கிரியைகள் சடங்குகளை முறைப்படி நெறிப்படுத் தியவர்களுக்கும், எமது அழைப்பை ஏற்று ஆத்மசாந்தி பிரார்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்டவர்களுக்கும், ”மணி நாதம் ” மலர் சிறப்புற ஆக்கவுதவியவர்களுக்கும் வடிவமைத்து அச்சிட்டுதவிய jp அச்சகத்தினருக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.