யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சண்முகநாதன் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிறாஜா ஜெயசீலி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அனற் கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தக்குமாரி(சாந்தி- பிரான்ஸ்), தவறாஜா(றாஜன் -பிரான்ஸ்), பிறேமக்குமாரி(பிரான்ஸ்), அனுஷாகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணோதயன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(பாலாமணி- சுவிஸ்), பரமலிங்கம்(பப்பு- பிரான்ஸ்), தனபாலசிங்கம்(சின்ராஸ்- கனடா), சத்தியலட்சுமி(பூமா- பிரான்ஸ்), விஜயலட்சுமி(விஜயா- பிரான்ஸ்), பாக்கியலட்சுமி(பேபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரெபானி, ஸ்ரெபான், சோனியா, ஸ் ரீபன், அக்ஷயன், அனித்தா, சதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செறினா, சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பிரான்ஸ் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைவாக குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கு பெறுவார்கள் என்பதினை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.