யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து நவராசசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-09-2023
அப்பா! அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள் எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை உங்கள் நினைவுகளும்
எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை எங்கள் மனதில்
நிலை நிறுத்தி உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 24-09-2023 அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதுசமயம் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
61, புதுறோட்(இராஜசிங்க வீதி),
கரவெட்டி மேற்கு,
கரவெட்டி.