யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குமாரசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
சத்தியம் நீதியைத் தான் உரைத்து
சந்ததிகள் வாழ்ந்திடத் தான் உழைத்து
கற்றவர் சபையில் காலடி பதித்து
உற்றவர் மனங்களில் தனி இடம் பிடித்து
கற்பகமாய் வாழ்ந்த கற்பகத் தருவே
காலமும் நேரமும் எம்முடன் மோத
காலத்தின் கட்டளையில் நாங்களும் வாட
மாதமும் ஒன்று உருண்டு தான் ஓட
தவியாய் தவிக்கும் உறவுகள்- இங்கே
புவி மகன் உங்களைக் காண்பது எங்கே?
அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 09-11-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Please accept our sincere sympathy to you and your family. Vijayeswaran family, Uduvil