Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 FEB 1952
மறைவு 27 FEB 2022
அமரர் சரவணமுத்து ஜோ சிறீஸ்கந்தராஜா
Electrician
வயது 70
அமரர் சரவணமுத்து ஜோ சிறீஸ்கந்தராஜா 1952 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் இல.748, ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், இல.123, புகையிரத நிலைய வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஜோ சிறீஸ்கந்தராஜா அவர்கள் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான பிலிப் யோசப்(றோஸ் ஆட்ஸ் ஸ்ரூடியோ) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயசிந்தா(சோதி- ஓய்வு பெற்ற ஆசிரியை. யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் அன்புக் கணவரும்.

சகிலா(பிரான்ஸ்), சரண்யா (Nirushana Building Constructions (pvt) Itd), சௌமியா (ஆசிரியை- கிளி இரணை தீவு றோ.க.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகரன்(பிரான்ஸ்), பிரசன்னா(மருத்துவ பிரதிநிதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மலர், சக்திகுமார் மற்றும் ராணி, ஆனந்தவடிவேல்(ஓய்வு நிலை சிரேஷ்ட முகாமையாளர், மக்கள் வங்கி), பேபி சரோஜா(கனடா), தேவி(ஜேர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), விக்னேஸ்வரி(அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயசீலி, ஜெயராணி, தேவி, விக்ரர் மற்றும் ஜெயவதி, அன்ரன், அருட்சகோதரி லூசியா(திருச்சிலுவைக் கன்னியர் சபை), ஜெயக்குமார், ஜெயமலர், பிலிப் துரைராஜா, மரியதாஸ் அலோசியஸ், காஞ்சனா, ஞானேந்திரா, இராஜலிங்கம், ஜேன், ஜெயாகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா(பிரான்ஸ்), ஆதுரி, அஸ்மிதா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப: 2.30 மணியளவில் யாழ் புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடிவேல் - சகோதரன் Mobile : +94771539158
ஜெயசிந்தா - மனைவி Mobile : +94772409709
சரண்யா - மகள் Mobile : +94773932680
செளமியா - மகள் Mobile : +94775790751



தகவல்: குடும்பத்தினர்