யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகர் சரவணமுத்து(பன்னாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
குகனேசன்(சுவிஸ்), ரஞ்சினி(வசந்தி- இலங்கை ), லோகநாதன்(Dias, இரசாயனவியல் ஆசிரியர்- New Science World, Jaffna), தயாநிதி(வைத்தியர், அவுஸ்திரேலியா), புஸ்பரஞ்ஜினி(கனடா), சிறீதரன்(சுவிஸ்), சுதர்சினி(ஆசிரியை- யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகாயினி(சுவிஸ்), தில்லைநாதன்(இலங்கை), இலங்காராணி(ஆசிரியை- யா/பெரியபுலம் மகா வித்தியாலயம்), சிவதாசன்(பொறியியலாளர், அவுஸ்திரேலியா), பிரபாகரன்(கனடா), சுபோதா(சுவிஸ்), கேதீசன்(Skill Development Officer- பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னுத்துரை, இளையதம்பி, சுப்பிரமணியம், தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை மற்றும் சின்னப்பிள்ளை, பூமணி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(பன்னாலை) அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
கவிஷ், கரிஷ், கிரிஷ், சுவஷ்திகா, கம்ஷாந், சாயிஷா, சானுஷா, ஆதிஷா, அக்ஷரா, கிஷாந்த், திஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது மருமகன் குகாவின் அன்புத்தாயாரின் துயர்ச்செய்தி கேட்டு மிகவும் மனம் உடைந்து நிற்கின்றோம். கண்கள் கலங்குதம்மா.உன்கடலொத்த அன்பினை நினைவு கொண்டால் கண் இமைக்கும் கணத்தில் நீங்கள் எமை விட்டு எங்கோ...