1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலை பிறப்பிடமாகவும், திருகோணமலை, Switzerland Zurich வதிவிடமாகவும் கொண்ட சரவணபவ ஆனந்தஜோதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் எங்கள் நினைவில்…
கணவனாய் கரம் பிடித்து,
வாழ்க்கைப் பாதையில் துணையாய் நடந்தீர்…
அப்பாவாய் அன்பு தந்து,
எங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாய் இருந்தீர்…
மாமனாராய் வந்த உறவையும்
மகனாய் அணைத்து பாசம் தந்தீர்…
துணையாய் துயரங்களைப் பகிர்ந்து,
நண்பனாய் மகிழ்ச்சியில் சிரித்தீர்…
இன்று எங்கள் அருகில் நீங்கள் இல்லை,
ஆனால் எங்கள் நினைவெல்லாம் நீங்களே…
உங்கள் குரல் கேட்காத நாட்களிலும்,
உங்கள் அன்பை உணர்கிறது எங்கள் இதயம்.
கணவனாய்…அப்பாவாய்… மாமனாராய்…
துணையாய்… நண்பனாய்…
நீங்கள் விட்டுச் சென்ற இடம்
என்றும் எவராலும் நிரப்ப முடியாதது.
காலங்கள் கடந்தாலும்,
உங்கள் நினைவுகள் மறையாது…
எங்கள் கண்களை விட்டு மறைந்தாலும்,
எங்கள் இதயங்களை விட்டு
நீங்கள் என்றும் மறைவதில்லை, அப்பா…
தகவல்:
ஆனந்தஜோதி குடும்பம்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute