திதி:05/02/2026
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரதா சுரேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -சகோதரியே
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
எங்கள் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எங்களை என்றும் வாட்டுதையோ சகோதரியே !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Dear Saratha Maami We miss you so much and wish you were still here. Rest peacefully until we all meet again 💞