Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 MAY 1935
இறப்பு 02 MAY 2021
அமரர் சரஸ்வதி விக்னராஜா
பழைய மாணவி- Jaffna Hindu Ladies College
வயது 85
அமரர் சரஸ்வதி விக்னராஜா 1935 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி விக்னராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தாயே நீங்கள் சுமந்த
தளிர்கள் நாங்கள் உங்களுடன்
ஒற்றுமையாய் வாழுகையில்
மீளாத்துயிலில் நீங்கள் உறங்க
ஆறாத்துயரில் நாம் உதிரும்
கண்ணீர் பூக்களால் அர்ச்சிக்கின்றோம்

அம்மா என்றழைத்தவுடன்
அள்ளி அணைத்தவர் நீங்கள்
கண் துஞ்சாக் கவலையுடன்
கருத்தாக வளர்த்தவர் நீங்கள்
பாசத்தைப் பாலாக்கி
பரிவோடு தந்தவர் நீங்கள்
மோசத்தில் எமை வீழ்த்தி
முன் சென்றீர்களே ஏனம்மா

அன்புடன் எமைவளர்த்து
அறிவையும் பண்பையும் நிறைத்து
வளமான வாழ்க்கையை
உளமாற நிறைவாக வாழ்ந்திட
உரம் போட்ட அன்புத் தெய்வமே
உங்கள் பணிசெய்ய பிள்ளைகள்
நாம்தரணியில் காத்திருக்க நீங்கள்
மண்விட்டு விண்சென்றதேனோ

உலகியலை நீங்கள் துறந்து - இன்று
ஒருமாதம் ஆகுதம்மா
ஊமைகளாய் எமதுள்ளம்
உங்களன்புக்கு ஏங்குதம்மா
ஆசிகேட்டு அடிபணிந்து
ஆண்டவனை இரஞ்சுகின்றோம்
உங்கள் பாதக்கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்
அன்னையே உங்களான்மா
அருள் பெறட்டும் அவன் அடியில்

தங்கள் பிரிவால் துயருறும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Raji - .
Vasanthy - .
Shanthy - .
Ravi - .
Rana - .
Baby - .
Ramesh - .
Tribute 44 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 06 May, 2021