யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 06-02-2025
உறவென்ற விருட்சம் ஒன்று உறங்கியது கண்டோம் அம்மா!
பிரிவென்ற பெருந்துயரம் வாட்டுது எம் உளத்தை!
துன்பம் வரும் வேளை எல்லாம் தூணாக நின்றீர்!
துவண்டு நாம் வீழாமல் காத்திருந்தீர்!
வாழ்வினில் எட்டாது வாழ வைத்த தெய்வமே!
வாடி மனம் தவிக்கின்றதே வாழ்ந்து நீங்கள் முடிந்ததனால்!
பாரினில் உமக்கென ஈடான உறவு நாம் பார்ப்பது இனி எப்போ?
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..