Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1937
இறப்பு 16 NOV 2020
அமரர் சரஸ்வதி இராமலிங்கம் 1937 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராமலிங்கம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நடராசா, லட்சுமி மற்றும் கந்தசாமி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாவதி(சுவிஸ்), கலாறஞ்சன்(சுவிஸ்), கலாமோகன்(சுவிஸ்), கலாரூபன்(சுவிஸ்), கருணாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலாநாதன், கலாநிதி(லண்டன்), சிவகரன்(உதவி பிரதேச செயலாளர்- பிரதேச செயலகம் பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜசிங்கம், லிங்கேஸ்வரி, சிவாணி, செல்வகுமாரி, சத்தியபாமா, மாலினி, சிவகுமார், ஜெயவாணி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோன்- தாரா, நிரேஸ்- சயங்கிரி, நிவேத்- சாரா, சதீபன்- ஆரபி, ரமணன், சேயோன், மகிஷா, அனுஷா, விதுஷன், மிதுனன், கபிலன், கிஷானி, கிஷான், ராகவி, சாருதா, கேஷாயினி, அபிஷேகனி, அச்சுதன், லக்‌ஷாயினி, அம்சவி, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆஜேஸ், ஆரியா, லேயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாயக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்