Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி நடராசா
இறப்பு - 19 MAY 2016
அமரர் சரஸ்வதி நடராசா 2016 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பால் எமை ஆண்ட பூட்டியே
 அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எங்களை விட்டுப் பிரிந்து சென்றதேனோ…
இன்றோடு பத்தாண்டுகள் ஆனதே…

உங்கள் முதல் பூட்டப்பிள்ளை நான் அல்லவோ…
ஆனால் உங்கள் மடியிலே வளர்ந்திடும்
 பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே…
 நான் பிறக்கும் முன்னரே எங்களை விட்டுப் பிரிந்து சென்றதேனோ…

உங்கள் முகம் நான் காணவில்லை…
 உங்கள் குரலும் நான் கேட்கவில்லை…
ஆனாலும் உங்களைப் பற்றிய கதைகள் எல்லாம்
என் மனதில் உயிராய் வாழும்…

 உங்கள் உடல் மறைந்தாலும்
உங்கள் நினைவுகளும் புகழும்
 எங்கள் குடும்பத்தின் இதயங்களில்
 என்றும் நிலைத்திருக்கும்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
மனமாரப் பிரார்த்திக்கின்றோம்…!

தகவல்: மைலா(பூட்டி)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices