திதி:04/06/2026
மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி குபேரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் மணிபோல எம்மை காத்து
மண்ணில் வளமோடு வாழவைத்து
கண்ணில் தெரியும் தெய்வம் என வாழ்ந்த அன்னையே
இன்று நீங்கள் மறைந்து ஓராண்டு ஆனாலும் – உங்களை
நாம் மறக்க நெஞ்சுரம் இல்லை.
ஆண்டு ஒன்றும் ஆனதே!
அன்புத் தெய்வமே உம்மை பிரிந்து.........
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
ஆறவில்லை எம் இதயம்
ஓராண்டு சென்றாலும்
உங்கள் நினைவு என்றும் நீங்காது
எம் நெஞ்சில் நீங்காது
எம் நெஞ்சமதில் உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!