யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தில்லையம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
அம்மா! பத்தாண்டு ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
இறைவனில்லா கோயிலாக பிறையில்லா
வானமாக திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்... தெய்வமாய்
வணங்குவோம் வாழ்வுள்ள நாள்வரை!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...