
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறத் தோப்பினில் நல்லறம் நாட்டினார்
தலைமுறை தளைக்கவே நல்வழி காட்டினார்
உற்றவர் உறவுகள் சூழ்ந்திடச் சுழன்றவர்
இனியதோர் வாழ்வினை வாழ்ந்து நிறைந்தவர்
விழிகளில் உம்முகம் நிழலெனத் தொடர்ந்திடும்
நினைவுகள் நித்தமும் உயிருடன் உலவிடும்
மிடுக்குடன் நம்பிக்கை உங்களின் அடையாளம்
அன்புடன் கருணையும் உங்களின் முகபாவம்
இருப்பிடம் கலகல என்பதெம் அனுபவம் - உங்கள்
இருப்பிடம் கலகல என்பதெம் அனுபவம்
மற்றவர் மதித்திடும் பண்புடன் நடந்தவர்
எந்நிலை வருகிலும் துணிவுடன் இருந்தவர்
உம் உயிர்த் தோப்பினில் துளிர்விட்ட பயிர் நாம்
உம் நிகர்க் காப்பினில் படர்ந்திட்ட கிளை நாம்
தாய்ப் பறவையின் நினைவினை
குஞ்சுகள் அடைகாக்கும் சிறகுதனில்
விழிகளில் உம்முகம் நிழலெனத் தொடர்ந்திடும்
நினைவுகள் நித்தமும் உயிருடன் உலவிடும்.
RIP