சதம் கண்டு இரண்டாண்டு ஓடிவிட சத்தமின்றி இருந்ததோ நல்வாழ்வு வித்தகம் புரிந்தவர் இவ்வுலகில் வித்தகராய் பாண்டவரை ஈன்றெடுத்து முத்தம் கொடுத்து வளத்தெடுத்து முத்திபெற ஏகிவிட்டார் இறைபதமே புத்தி தடுமாறாத புன்னகையில் நடைபயில பக்தி பரமனையே சேர்ந்திட வாழ்ந்தவர் சித்தம் சிறக்கடிக்கப் பறந்திட்டார் சித்திதான் வாழ்வினிலே கனிவோடு சிந்தித்தே வாழ்ந்திருந்தார் மனையிலே பந்தமெல்லாம் கூடிவர பாசப்பிணைப்பில் பற்றி நின்ற பார்வதித் தாயார் பறந்தனரு ஐயிரண்டு திங்களாய்த் தவமிருந்து பெற்ற ஐவரையும் இணைத்து வைத்த மருகரையும் ஐவர்பால் கண்ட நன்முத்துக்கள் பேரரையும் ஐயோ என அழவைத்துச் சென்றாரே என்செய்வோம் ஐயனார் பாதமதல் இணைந்திடவோ அவர்நோக்கம் ஐங்கரனை வேண்டி ஒளைப் பாட்டிபோல் விரைந்தார் ஐயம்தவிர்த்து அரனாரை பாதக்கமலத்தில் இணைத்திட ஐயாவென வேண்டித் தொழுதிடுவோம் முத்திக்கு! பாசப்பிணைப்பறுத்துச் சென்றிட்டார் சாந்திதான் பாதார விந்தமதில் பெற்றிடுவார் அமைதி காண்பீர் நன்றி த.சிவபாலு தயாதேவி குடும்பத்தினர் (கனடா)
May her soul attain moksha. Our deepest condolences to the dearest family.