
யாழ். காரைநகர் S.M.கேணியடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பழனி செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவகுரு மணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, செல்லம்மா, பஞ்சரட்ணம், சுப்பிரமணியம் மற்றும் செல்வராணி(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமசுந்தரம், கனகசுந்தரம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மீனாகுமாரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரஞ்சன், நிசாந்தன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பல் ஓடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பரமசுந்தரம் - மகன் : +94771012283
கனகசுந்தரம் - மகன் : +94778070054