யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம்(கைதடி- விதானையார்) செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்மணி, வசந்தா, நிருமலன், நிர்மலராஜன், நிர்மலகாந்தன், நிர்மலகுமார், குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(விதானையார்- கைதடி), யோகநாதன், சுபரூபி, தபோநிதி, அனுஷியா, பத்மவாசினி, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரூபன், சுதர்ஜினி, மாளவியா, சங்கியா, அபிநயன், ஆத்மிகன், தர்மிக், மகிலன், மகிழினி, அபிஷகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தனை பிரார்த்திக்கின்றோம்.