10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா
வயது 61
அமரர் சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா
1950 -
2011
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Esslingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இல்லத்தலைவனாய்..
இல்லறத்துணைவனாய்..
கண்ணிறை கணவனாய்..
தன்னிறை தந்தையாய்..
அறுபது ஆண்டுகள் அவனியில் வாழ்ந்தீர்
அப்பா என்றழைத்தோம்
அன்பாய் வாழ்ந்திருந்தோம்
உங்கள் பிள்ளைகள்நாம் உங்கள் வழிநடந்து
உங்கள் ஆசைப்படி வளர்ந்துவிட்டோம்!
எம்வாழ்வின் வசந்தங்களை பார்த்து
மகிழ்வதற்கு நீங்கள் இன்றெம்மோடு இல்லையப்பா
எந்நாளும் நினைக்கின்றோம் உம்மையப்பா!
தந்தையின் வீட்டிற்கு தஞ்சமென சென்றவரே...
தந்தையிடம் எமக்காய் தந்தையாய் மன்றாடும்...
தரணியர் நாமும் தந்தையே
உமக்காய் தந்தையை இறைஞ்சுகிறோம்....
விண்ணகமாட்சியில் இறையோடு மகிழ்ந்திருப்பீர்....
இறையோடிருந்து எங்களை ஆசீர்வதிப்பீர் !!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்