யாழ். சுதுமலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை எம் மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.