மரண அறிவித்தல்

Tribute
49
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி சிவபாதம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுரேஷ்குமார், ரமேஷ்குமார், செல்வரஜனி, சாந்தகுமார், வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலக்சுமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜாதவி, ஜானுயா, ஜாதேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கனிஸ்கா, தருனிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கணேசன், தர்மு, வசந்தி, மலர், ராணி, செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்