யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி, யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி கெங்காதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் 31வது நாள் நினைவஞ்சலி கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தாங்களும் இணைந்து அன்றைய மதியபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அன்னாரது மரணச்செய்தியறிந்து எம்முடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும், முகநூல், மின்னஞ்சல் RIBBOOK மூலமாக எம்முடன் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்கள், அனுதாபங்கள் தெரிவித்தவர்கள், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சார்த்தியவர்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் மற்றும் சகல அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
முகவரி:
Shri Kanaga Thurkkai Amman Temple,
5 Chapel Road
London,
W13 9AE.
Phone: +44208100835