யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, திருநெல்வேலி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி ஜெயானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற இரண்டு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னையே! அன்பில் உனை விஞ்ச யாரோ!!
மென்மையில் பூவாய் மலர்ந்தாயே அசையும்
கண்மணியில் காட்சியானாயே...
என் இதயம் கனக்கா
மாதாவே வேதங்கள் வாழ்த்தும் பாசமே
சுமத்தல் நீர் செய்ய பிறப்பும் அம்மா
தரத்தர பூமியில் உருவாய்ப் பிறந்தோமே
அசைந்து வளர்ந்து சிறந்தோமே
இன்று அசைவற்று அமைதியிலா
நீ தாயே நிலையாய் நிசத்திலா
யான் கடமை செய்தேன்!
ஆருயிராய் வயோதிபத்தில் அணைதேனே
சோறூட்டிய கைகளைத் தடவினேனே
அழகு அன்புக்கண்களை நீவினேனே
பரந்த உன் நெற்றியில் முத்தம் தந்தேனே
உனைப்பார்த்து இன்று வியர்க்கிறேன்
என்கடன் செய்து தவிக்கிறேன்....
உனையிழக்கும் இயற்கை நியதிகண்டு
இனித்தினமும் அழுது கலங்குவேனோ
குங்குமம் பார்த்தேன் விதவையாய்ப் பார்த்தேன்!
இனி எப்படிப் பார்ப்பேனோ அம்மா!!!
உங்கள் அன்பு மகள் தமா....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. May her soul rest in peace.