Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAR 1940
இறப்பு 29 DEC 2018
அமரர் சாந்தநாயகி சுப்ரமணியம்
முன்னாள் சங்கீத ஆசிரியர் - யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் கல்லூரி, ஓய்வுபெற்ற சிரேஷ்ட இசை விரிவுரையாளர்- இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, யாழ் பல்கலைக்கழகம்
வயது 78
அமரர் சாந்தநாயகி சுப்ரமணியம் 1940 - 2018 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப்பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட சாந்தநாயகி சுப்ரமணியம் அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற தட்சிணாமூர்த்தி, காலஞ்சென்ற பாலசுந்தரமூர்த்தி, சௌந்தரநாயகி, ரங்கநாயகி, கமலநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வைத்தீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 காலஞ்சென்ற தங்கமுத்து, ராஜேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- மட்டக்களப்பு விபுலானந்த இசைக்கல்லூரி), பத்மாவதி, காலஞ்சென்ற ஜெகதீசன்(முன்னாள் முகாமையாளர்- இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகன்யா, லாவண்யா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

பவானி, ரோகிணி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிசாந்தினி, கீதாஞ்சலி, சஞ்சீவன், பிரதீபன், தாரணி, ஷாமினி, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்னார் 31-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்