யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சாந்தநாயகி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்) அவர்களின் அருமை மனைவியும்,
மனோகரன்(பிரான்ஸ்), மனோரஞ்சிதன்(பிரான்ஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), மதிரூபன்(பிரான்ஸ்), ஜெயமதி(பிரான்ஸ்), ஜெயசுதா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகவதி, காலஞ்சென்றவர்களான சின்னராசா, பாலரட்ணம், பொன்னம்பலம், செல்லத்துரை, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுமதி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), சந்திரகலா(பிரான்ஸ்), யசோதரா(பிரான்ஸ்), தேவசுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோஜ், டினேஷ், நிஷாந், மிதுளன், மதுமிதா, நத்தாஷா, ஜெனிக்ராஜ், ஜெனுஜன், மயூரன், யதுஷன், ரவிராஜ் ஆகியோரின் அருமைப் பேத்தியும், ஹன்சனா அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-03-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.