Clicky

மரண அறிவித்தல்
அமரர் சந்தனம் கணேஷன்
இறப்பு - 03 SEP 2023
அமரர் சந்தனம் கணேஷன் 2023 கேகாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கேகாலை வரக்காபொலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தனம் கணேஷன் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சந்தனம் எல்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்திய கலாரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

பெறாமகளான ஸ்ரீ கிருஷ்ணிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜனகன் பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வெங்கடேஸ்வரன், வெங்கட்டம்மாள்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணகுமார் முத்தையா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஸ்ரீரஞ்சன், ஜெயரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரனதீரன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-09-2023 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை பி.ப 04:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணகுமார் - உடன் பிறவாச் சகோதரர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 02 Oct, 2023