1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சாந்தமரியா தாவீதுப்பிள்ளை
(நவமணி கீதபொன்கலன்)
வயது 84
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தமரியா தாவீதுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ!
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக்கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்