Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 DEC 1950
மறைவு 30 AUG 2020
அமரர் சண்முகராஜா நாகராஜலெட்சுமி
வயது 69
அமரர் சண்முகராஜா நாகராஜலெட்சுமி 1950 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா நாகராஜலெட்சுமி அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதியம்மா தம்பதிகளின் பாசமிகு அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி சண்முகராஜா(ஓய்வுபெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவபிருந்தா, யாழினி(பிரான்ஸ்), ஹரிதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிமலமூர்த்தி, விபுலானந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயகிருஷ்ணசீலன், காலஞ்சென்ற இரகுநாதன், கைலைநாதன்(இந்தியா), ஜெயலக்சுமி, சோதிலிங்கம், லீலாவதி, யோகராணி, குணமணி, லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனஜாராணி, காலஞ்சென்ற மலர்மணி, கோகிலா, சௌந்தரராஜன், குகப்பிரியா, இரமநாதன், இரமணஜோதி, வசந்தநாயகி, ஸ்ரீரங்கன், சத்தியசீலன், நேசரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜ்குமார், பிரியா, தனஞ்சயன், மேனகா, தனுப்பிரகாஷ், காலஞ்சென்ற மிதுன்சங்கர், சாயிகௌசாலினி, பிரதீபன், தட்சாஜினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

சதீஷியா, நேதுஷன், ரகுணண், மிதுனன், அரிசனன், சுலேகா, சுஜீவன், சுகிர்த்தா, சைபியன், ரிதிஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் சின்னம்மாவும்,

நிதேஷ், நிருஷிதா, அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 25 Sep, 2020