Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JUN 1954
இறப்பு 22 AUG 2026
திரு சண்முகம் சதானந்தன்
வயது 72
திரு சண்முகம் சதானந்தன் 1954 - 2026 குப்பிழான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சதானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தி
அடைய என்றும் பிராத்தி்க்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

அமரர் சதானந்தன் அவர்களின் மரணச்செய்தி அறிந்து, எங்கள் துயரில் கலந்துகொண்டு, எமக்கு அன்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் RIPBOOK ஆகியவற்றின் மூலம் தொடர்புகொண்டும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் சதானந்தன் அவர்களின் நினைவாக மலர்வளையங்கள் மற்றும் மலர்மாலைகள் அனுப்பி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், 87 Initiative மற்றும் Eekai Foundation ஆகியவற்றிற்கு நன்கொடைகள் வழங்கியவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்துயரமான காலத்தில் எங்களுக்கு உணவு வழங்கியும், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றிகள்.

அமரர் சதானந்தன் அவர்களின் அன்பான நினைவாகவும், நன்றியின் அடையாளமாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பில் 87 Initiative மூலம் இலங்கையில் உள்ள 14 கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 300 மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்குப் பின்னரான கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு நன்கொடையை வழங்கியுள்ளோம்.

மீண்டும் ஒருமுறை எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 25 Aug, 2026