யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சாந்தலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீ
தோன்றுவதாய் எண்ணி...!!
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி! சாந்தி! சாந்தி
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சண்முகம் சாந்தலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டி கிரியை 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.
We share our deepest condolences to your family. Our prayers are with you. May his soul RIP. Regards, Lingam’s Family (Canada)