7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் ரவீந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஏழு ஆண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்