வரலாறு ஒன்று வயதாகி விட்டதென்று – தினமும் வார்த்தை பேசி ஒரு உறவை வளர்த்து தொலைதூரமாய் இருந்தாலும் தொலைபேசி -மூலம் இடர்களைப் பல விடயந்தன்னை இங்கிதமாய் எமக்கு சொல்லி அருகே இருப்பது போல் அடிக்கடி பார்த்துப் பேசி – வழிகாட்டிய எங்கள் குல விளக்கே – நின் ஒளி எம்மிருள் அகற்றியதே - ஆனால் இன்று ஓய்ந்த உங்கள் மூச்சு ஏம்மை ஒப்பாரி வைக்க வைக்கிறதே இருந்தாலும் இருக்கும் போது எம்மோடு உறவாடிய உன்னுள்ளம் இன்றும் எம்மோடு – ஆண்டு தான் ஓன்றென்னு போயிற்று – நின் ஆவி எம்முடனிருந்து காத்து நிக்குது! வானுலகம் நீங்கள் சென்று – எம் வாழ்வைப் பார்க்கிறாய் விண்ணோக்கி வேண்டுகிறோம் எமக்கு உங்கள் துணை வேண்டும்! நின் ஆத்ம சாந்தி பெற வேண்டுகிறோம் ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!! ஆண்டொன்று ஆகுதியாய் போனதுவே – எங்கள் அன்னையின் ஆருயிர் விண்ணுலகம் சேர்ந்ததுவே! குலம் காத்த குலமகள் இன்று குத்து விளக்காய் ஓளியாகிப் போனாள். காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறாத நின் பிரிவு காலனவன் தோற்றே போனான் காலம் முழுவதும் எம்முடன் நீ கலந்ததினால் உருவாயிருந்த நீங்கள் இனியும் உயிராய் எம்முடனே இருப்பாயம்மா ! ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஒன்று உறங்கிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மறக்ககூடாத ஒரு பண்பாளர். அவர் எங்களிடம் கொண்ட அன்பும் நாங்கள் அவரிடம் கொண்ட அன்பும் அவர்...