

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த அப்பாவே !!
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த அப்பாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உம்மையே உலகமென எண்ணியே வாழ்ந்திருந்த
அம்மாவின் நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
காவல் தெய்வம் நீர் ஐயா காற்றோடு கலந்ததேனோ
அம்மாவைத் தேற்ற ஐவர் நாம் அருகிருந்தும்
அப்பாவோடு வாழ்ந்த வாழ்வே சிறப்பென போற்றுகிறார்
எங்களின் இதய தெய்வமே,
பத்து ஆண்டுகள் கடந்துப்போனாலும்
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
எம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்
உம் நினைவோடு வாழ்ந்திருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்