யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்றுறை காவல் ஊரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல, 372, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை(நவம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வருகை தந்தும், இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், ஏனைய தொடர்பூடகங்களூடாகவும் ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து சென்றவர்களுக்கும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையங்களை அனுப்பிவைத்தவர்களுக்கும் உணவு மற்றும் உபசாரங்களை செய்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது அந்தியேட்டிக்கிரியை 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற்று பின்னர் மதியபோசன நிகழ்வு நல்லூர் துர்க்கா மணிமட்டபத்தில் நடைபெறும் என்பதனையும் தயவுடன் அறியத்தருகின்றோம்.