யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 06-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாசினி(இலங்கை), சுபாஸ்கரன்(கனடா), உதயகரன்(நோர்வே), காமினி(சூட்டி- ஜேர்மனி), றோகினி(பொன்னான்- நோர்வே), குமுதினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரஸ்வதி, கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சிவறஞ்சினி(கனடா), அமிர்தவர்ஷினி(நோர்வே), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), விஜயரெட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதானந்தன், வீரலட்சுமி மற்றும் கமலாதேவி, பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிபிரசாத், கார்த்திக், அனுசியா, ஜனனி, நிசானி, கீர்த்தனா, சாகித்தியா, கௌதம், தீபிகா, விநோத், சரன், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுதர்சினி- ஹரிபிரசாத், சுலக்சினி- கார்த்திக் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
பிரணவி, அப்சரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் இல. 49 விபுலானந்தர் வீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am very sorry for your loss, we wish the best for your family.