யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கனடா Vancouver, லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தந்தையே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த தந்தையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும் வாழ்ந்து
கொண்டு இருக்குறீர்கள் அப்பா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உங்கள் இறுதி மூச்சு காற்றோடு
கலந்தது என்ன நம்ப முடியவில்லை
நடந்தது என்னவென்று
அப்பா அப்பா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் 15 உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக
என்றும் உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!