
மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி செல்லம்மா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கர் கந்தம்மை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் வெள்ளச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாமித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவானந்தராசா(கனடா), வரலெட்சுமி(கனடா), தவராசா(சுவிஸ்), இராசலெட்சுமி(கனடா), அன்னலெட்சுமி, பத்தமராசா(கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(சுவிஸ்), ஜெயலெட்சுமி, மேகராஜா(கனடா), காலஞ்சென்ற சிவலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, காசிப்பிள்ளை, தங்கப்பிள்ளை, தங்கம்மை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஞானாம்பாள்(கனடா), குழந்தைவடிவேல்(கனடா), மங்கையக்கரசி(சுவிஸ்), பிரேமராஜன்(கனடா), நல்லரெத்தினம்(பிரதி அதிபர் விவேகானந்தா மகாவித்தியாலயம் கோவில்போரதீவு), எஸ்மி(கனடா), நிதியரசி(சுவிஸ்), அற்புதநாயகம், பிரியதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வசந்தராசபிள்ளை, தெய்வநாயகம், ஆறுமுகம், தம்பிமுத்து, செல்லத்தங்கம், கண்டுமணி, காசுபதி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ஜன்பிரசாத், பிரசன்யா, நிலுஜா, நிலக்ஸிகா, கம்சலா, சர்மிலா, நிலக்ஷி, டிலக்ஷி, றுக்ஷி, நிதுசன், யூயிதா, குவேனிதா, தர்சனன், ஏரிக்கா, பெலிசா, றிதுசன், ஹரிநிசன், நிருந்திகா, நிதுசிகா, டியானா, சந்தோஸ், பிரவின், கோட் பிறி, வினோத்குமார், பீமாஸ், கிரிதரன், சுமன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
ஜஸ்வி, றிஸ்க்கன், றினிட்டா, அஸ்வமேனன், ஆதேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் களுதாவளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.