

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதர் திருச்செல்வம் அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாமிநாதர், மேரி மாக்ரெட் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(இலங்கை), வசந்தி(ஜேர்மனி), தீபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரோசமுத்து, திரேசம்மா மற்றும் மரியநாயகம், காலஞ்சென்றவர்களான சின்ராசு, நேசகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசுந்தரம்(இலங்கை), பவானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராணி, ஞானமலர், கமலம், செல்லத்துரை, குணம்(சுவிஸ்), செல்வநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோஜன், டிலானி(இலங்கை), அம்சகன், அபிசகன், ஓவியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-07-2019 புதன்கிழமை அன்று முதல் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிவரை இல. 248, பிரதான வீதி மகாறம்பைகுளம் வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியவில் வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.