10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாம்பசிவம் பூமாது அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூவினும் இனிய பூமாது!
பெயர் போலவே
மென்மையும் இனிமையும்
அக அழகும் புற அழகும்
இணைந்த அற்புதமான ஆத்மா!
உங்கள் இதயம்
பிரேமையின் உறைவிடம்
உங்கள் செயல்கள்
நேர்த்தியின் வெளிப்பாடு
உங்கள் விருந்தோம்பல்
அதை மிஞ்ச புவியில் மாந்தர் உண்டோ!
முகத்தில் மங்காத சிரிப்பு
வார்த்தைகளில் இனிமை
உயிர்களில் காருண்யம்
நூல்களில் பிரியம்
என்று அடுக்கலாம் நாம் கண்ட
தம் இயல்புகளை!
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
நீங்கள் விட்டுச் சென்ற
அன்பின் வாசனை
இன்னும் எம் வாழ்வில் நறுமணமாய்!
இறையின் தோட்டத்தில் - இன்று
அழியாத மலராக ஓய்வெடுக்கச்
சென்றுள்ள தாம்
தசாப்தம் தாண்டி நினைவுகளாய் எம்முடன்!
தகவல்:
குடும்பத்தினர்