

கால மாற்றத்தில் உற்ற நட்புகள் உறவினர்கள், நண்பர்கள் என்று என்று நாம் முகம் மறந்து போன உருவங்கள் பல ..ஆனால் சில தோற்றங்கள் மனதில் என்றும் அழியாத நினைவுகளால் வரையப்பட்டு இருக்கும். சைவத் தமிழ் வித்தியாசாலையில் அரிய நாயகம் மாஸ்டர் அதிபராக இருந்த காலத்தில் அதிபர் அறை என்று எழுதி இருக்கும் .. அதற்குள் என்றுமே இருப்பவர் என்றால் பஞ்சாட்சரம் ஆசிரியர் , அவரை தொடர்ந்து சகுந்தலா டீச்சர். பல ஆசிரியர்கள் இருந்தாலும் நெற்றி நிறைந்த குங்குமபொட்டு , வாரி இழுத்து நிறைந்த நெற் போட்ட கொண்டை , பேச்சில் தெளிவு , இழையோடும் சிறிய புன்னகையுடன் வலம் வந்த ஆசிரியை சகுந்தலா. மூன்றாம் வகுப்பில் எனக்கு ஆங்கில பாடம் எடுத்தவர்..அவரது ஆங்கில புலமையும், நேர்த்தியான சேலை உடையில் அவரது நேர் கொண்ட நடையும் மற்ற ஆசிரியர்களுக்கு இவரை பெரும் மரியாதையுடன் பார்க்க வைத்தது. அதிபராக கடமையாற்றி மறைந்த அவரை போற்றுவோம். அவர் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்
Dear family Please accept our heartfelt condolences and prayers. May our teacher's soul attain eternal peace. Om Shanthi.