1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Uri ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சஜீவன் திஜானா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே திஜானா
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுடன்
சந்தோஷமாய் இருப்பாய் என்றிருந்தோம்!
மாறாது எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
சென்றுவிட்டாய் என்று எங்களால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையா மகளே..
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகளே...
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம் மகளே!
உன் நினைவுகளோடு..
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,
மாமா, மாமி, மற்றும்
உற்றார், உறவினர்கள்....
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that an angel passed away. My thoughts are with you and your family.