10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சகுந்தலாதேவி சுந்தரலிங்கம்
வயது 56
அமரர் சகுந்தலாதேவி சுந்தரலிங்கம்
1959 -
2015
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகுந்தலாதேவி சுந்தரலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள்பத்து ஆனதம்மா !
இன்றும் உற்றார் உறவினர் தாம் கூடும் சபைதனில்
எப்போதும் சொல்லும் ஓர் வார்த்தை
உங்கள் பெயர் தானம்மா....!
ஒவ்வோர் முறையும் "கௌரி போல் உண்டா?"
என்று எல்லோரும் சொல்ல கேட்க...
உங்கள் மகள்களாய் ஆர்ப்பரிக்கிறோம்ம்மா..!
காதல் கரம் பற்றியவரோடு
கலந்துவிட்டீர்கள் என்றெண்ணி
நிம்மதிப்பெருமூச்செறிகிறோம்ம்மா!
நீங்கள் இல்லை என்று தோன்றவில்லை
காரணம் எம் வீட்டு உங்கள்
பேரப்பிள்ளைகள் முகசாயலிலும்
உங்களை காண்கிறோம்ம்மா!
எப்போதும் உங்கள் நினைவுகளோடு,
அன்புடன் மகள்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்