Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1928
இறப்பு 13 FEB 2019
அமரர் சகுந்தலா ஜெகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, விவேகானந்தா மகா வித்தியாலயம், இரத்மலானை இந்துக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி,இளைப்பாறிய விரிவுரையாளர்- Butterworth College of Education- South Africa
வயது 90
அமரர் சகுந்தலா ஜெகநாதன் 1928 - 2019 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சகுந்தலா ஜெகநாதன் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் நடராஜா J. P(முன்னாள் அரச சட்டத்தரணி, அநுராதபுரம் நகரசபைத் தலைவர்), காந்திமதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கார்த்திகேசு(மலேசியா, தொல்புரம்), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகநாதன்(முன்னாள் கல்லூரி அதிபர்- இரத்மலானை இந்து கல்லூரி) அவர்களின் அருமைத் துணைவியும்,

மைதிலி(Auckland), ஜனார்த்தனா(Canberra), சஞ்சயன்(Perth), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சத்தியநாதன்(Auckland), ஜசோ(Canberra), சிவாஜினி(Perth) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகாதேவா, பத்மநாதன், சத்தியபாமா துரைசிங்கம், ராதா அரியரத்தினம்(கனடா), காலஞ்சென்ற வாமதேவா மற்றும் விமலா ராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கஜானன்(Brisbane), மயூரன்(சிட்னி), ஜனனி(சிட்னி), சைதன்யா, அமிதாப், அபர்ணா(Perth) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்