10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சடையர் இளையதம்பி
வயது 86
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சடையர் இளையதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அல்லும் பகலும் அயராது உழைத்த போதும்
அதன் பலன் கைமேல் காணாது
கணக்காக தீர்ந்து விடும்
கஷ்டபட்டு உழைத்தாலும்
பட்டதெல்லாம் கஷ்டமாகவே ஆனது
ஐயா! நீங்கள் சொத்துக்கள் சேர்க்கவில்லை
சொந்தங்கள் சேர்ந்திருக்க நினைத்தீர்கள்
அன்பை விதைத்தீர் ஐயா
அதை அறுவடை காணும் வேளை
புயல் வந்து அழித்தது போல்
திக்கெங்கும் புலம் பெயர்ந்தோம்
இயற்கையின் விதி வழி
உங்கள் பயணம் சென்று இன்று ஈரைந்து ஆண்டுகள்
என்றும் எம் இதயங்களில் மங்காது
ஒளி வீசும் உங்கள் திருமுகம்
உங்கள் நினைவுகளோடு வாழும் உங்கள் உறவுகள்
தகவல்:
மகள் மலர்(கலா)- குலேந்திரன்(ஜேர்மனி)