Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUL 1944
மறைவு 30 MAR 2026
திரு சபாரத்தினம் திருஞானசெந்திலால் (குட்டி)
ஓய்வுபெற்ற உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர், உரிமையாளர்- நித்தியானந்தா கணேசா ஸ்ரோஸ், NGS வைன் Stores, வவுனியா
வயது 81
திரு சபாரத்தினம் திருஞானசெந்திலால் 1944 - 2026 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி பனிக்கர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திருஞானசெந்திலால் நேற்று 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா கௌரிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷியா(பிரதம நூலகர் பொது நூலகம், யாழ்ப்பாணம்), லாவண்யா(அவுஸ்திரேலியா), ரதிப்பிரியா(இலங்கை வங்கி, புன்னாலைக் கட்டுவன் கிளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகரன்(இறைவரித் திணைக்களம் வடமாகாணம், கைதடி), ரூபகாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், லக்ஷ்மணலால், ரவீந்திரலால்(குஞ்சுகண்ணா), பாலச்சந்திரலால், சுந்தரிங்கம், சந்திரபோஸ் மற்றும் ஜெயலக்சுமி, பங்கையற்செல்வி(அவுஸ்திரேலியா), அம்பலவாணர், குபேரலால்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம்(GS) அவர்களின் அன்பு மைத்துனரும்,

குணசிங்கம், பூபாலசிங்கம், செல்வராணி, இரத்தினசிங்கம்(கனடா), ஆனந்தராஜா(பிரித்தானியா), வசந்தராணி, வரதராஜா, பத்மராணி, ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கவிஷ்ணா(யா/வேம்படி மகளிர் கல்லூரி), அக்‌ஷரன்(யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி), சகீத்(அவுஸ்திரேலியா), சஜனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2026 புதன்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
வீடு - Mobile: +94768707911
Mobile: +94776469882

தகவல்: குடும்பத்தினர்